News

பெருந்தோட்டப்பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணத்தை வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது!

Posted on

பெருந்தோட்டப்பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணத்தை வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது!

கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரை தொடர்புக்கொள்ளுமாறு எஸ்.ஆனந்தகுமார் கோரிக்கை

தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளி;க்கும் செயல்பாடு மலையக பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில குறைப்பாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நிதி உதவியின் கீழ் அண்மையில் இலங்கைக்கு 2 பில்லியன் பெறுமதியான நிவாரணப் பொதிகள் கிடைக்கப்பெற்றது. கட்டம் கட்டமாக இந்த நிவாரணம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த நிவாரணத்தை பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக தற்காலிகமாக நிவாரணத்தை வழங்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நிவாரணத்தை விரைவாக வழங்கும் தேவையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்று அந்தப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் மாத்திரமே நிவாரணப் பொதிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்க கூடாது. அவ்வாறான தகவல்கள் இருந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும்.
இதேவேளை, தோட்டத்தில் பணிப்புரியாதவர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறானவர்கள் உடனடியாக பிரதேச செயலாளரை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version