News
விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவு தொகை
2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவு தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
அதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ளும் மதிப்பீட்டுக் குழுவுக்கு, ஒரு விடைத்தாளுக்கு செலுத்தப்படும் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, பரீட்சை நிலைய ஊழியர்கள் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான நாளாந்த செலவை கருத்திற் கொண்டு அதனை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
10.06.2022 அன்று அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.