News

மண் நிறைந்த மன்றாசி தோட்ட பொது மைதானம்

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பல வருடகாலமாக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், அரச விழாக்கள், மே தினம், களியாட்டங்கள் என பல்வேறு வகையான நிகழ்வுகளின் அரங்கமாக மன்றாசி தோட்ட பிரதான மைதானம் காணப்பட்டது.

எனினும் தற்போது குறித்த மைதானத்தை எந்தவொரு நிகழ்வுகளும் பயன் படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த ஒருவருடத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அக்கரப்பத்தனை போடைஸ் அட்டன் பிரதான வீதி முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மானின் பணிப்புரைக்கமைய செப்பனிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது வெட்டப்பட்ட மண்ணின் பெரும்பகுதி மைதானத்தில் கொட்டப்பட்டது. எனினும் குவிக்கப்பட்ட மண் அப்படியே விடப்பட்டுள்ளதோடு மைதானம் பாவனைக்கு உகந்த
முறையில் புணரமைக்கப்படவும் இல்லை. ஆரம்ப காலத்தில் நிகழ்வுகள் பல நடைபெற்ற மைதானம் இன்று விளையாட கூட பயனற்றதாகியுள்ளது. எனவே இந்த மைதானம் முன்பிருந்தது போல சீரமைத்து தரும்படி இங்குள்ள இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


சரத்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top