Kovil
பாங்கொக் அருள்மிகு ஸ்ரீ மகாமாரி அம்மன் திருக்கோயில்
தாய்லாந்து நாடு – தலைநகர் பாங்கொக் அருள்மிகு ஸ்ரீ மகாமாரி அம்மன் (மகா உமாதேவி) திருக்கோயில்
அருள் பொழிந்து வளம் வழங்கும் அம்மா மகாமாரி
ஆற்றலுடன் நாம் திகழ அருள் தரவேண்டும்
இன்பநிலை என்றும் நாமடைய
தாய்லாந்து நாட்டினிலே கோயில் கொண்ட தாயே அருள்வாய்
உமாதேவி என்ற நாமம் உடையவளே அம்மா மகாமாரி
உற்றவர்க்கும், ஊரவர்க்கும் உயர்வு தர வேண்டும்
வளம் கொண்ட பெருவாழ்வு என்றும் நாமடைய
தாய்லாந்து நாட்டினிலே கோயில் கொண்ட தாயே அருள்வாய்
தென்கிழக்கு ஆசியாவில் கோயில் கொண்ட அம்மா மகாமாரி
தெளிவான மனத்துடனே வாழவழி தரவேண்டும்
தடுமாறா நிலை என்றும் நாமடைய
தாய்லாந்து நாட்டினிலே கோயில் கொண்ட தாயே அருள்வாய்
வரும் துன்பம் தடுத் தெம்மை அணைத்தருளும் அம்மா மகாமாரி
வற்றாத கருணை தந்தெம்மை வாழவழிதர வேண்டும்
வெகுள்ச்சியில்லா மனநிலையை என்றும் நாமடைய
தாய்லாந்து நாட்டினிலே கோயில் கொண்ட தாயே அருள்வாய்
உயிர்களுக்கு உயிராக உள்ளிருக்கும் அம்மா மகாமாரி
உயர்வு நிலை தாழாது வாழவழி தரவேண்டும்
உற்றவர்கள் உறவு சிந்தா நிலை என்றும் நாமடைய
தாய்லாந்து நாட்டினிலே கோயில் கொண்ட தாயே அருள்வாய்
அனைத்துயிற்கும் உயிரளிக்கும் அம்மா மகாமாரி
அச்சமின்றி நாம் வாழவழி தரவேண்டும்
அஞ்சாத மனவுறுதி என்றும் நாமடைய
தாய்லாந்து நாட்டினிலே கோயில் கொண்ட தாயே அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.