Kovil
எட்டியாந்தோட்டை – அருள்மிகு ஸ்ரீ விநாயகர் திருக்கோயில்
சப்பிரகமுவ மாகாணம்- கேகாலை மாவட்டம் – எட்டியாந்தோட்டை நகரம் – அருள்மிகு ஸ்ரீ விநாயகர் திருக்கோயில்
துணையென்று அடிபணிவோர் நலம் காக்கும் விநாயகரே
துவண்டு மனம் வாடாமல் எமக்கருள வாருமைய்யா
துதித்து நிற்போர் மனக்கவலை தீர்த்தருள வேண்டுமைய்யா
எட்டியாந்தோட்டையிலே இருந்தருளும் விநாயகப் பெருமானே
தேடிவந்து அடிபணிவோர் துயர் களையும் விநாயகரே
தெளிவான வழிகாட்டி எமக்கருள வாருமைய்யா
தொல்லையின்றி வாழும் வழி எமக்காக்க வேண்டுமைய்யா
எட்டியாந்தோட்டையிலே இருந்தருளும் விநாயகப் பெருமானே
தொல்லைகள் போக்கி எமக்கு துணையிருக்கும் விநாயகரே
தூயவள வாழ்வதனை எமக்கருள வாருமைய்யா
தெவிட்டாத உன் கருணை எமக்காக்க வேண்டுமைய்யா
எட்டியாந்தோட்டையிலே இருந்தருளும் விநாயகப் பெருமானே
மலை சூழ்ந்த திருநகரில் வந்தமர்ந்த விநாயகரே
மாண்புடனே கூடிய நல் வாழ்வதனை எமக்கருள வாருமைய்யா
மானம் மரியாதை பேணி வாழ எமக்கருள வேண்டுமைய்யா
எட்டியாந்தோட்டையிலே இருந்தருளும் விநாயகப் பெருமானே
எதிலும் எங்கும் உறைந்தருளும் விநாயகரே
எதிர்கால நல்வாழ்வை எமக்கருள வாருமைய்யா
எதிர்த்து வரும் தீயபகை நெருங்காது எமைக்காக்க வேண்டுமைய்யா
எட்டியாந்தோட்டையிலே இருந்தருளும் விநாயகப் பெருமானே
ஆணை முகம் தாங்கி நின்று அருளுகின்ற விநாயகரே
ஆதரவு தந்தெம்மைக் காத்தருள வாருமைய்யா
அரவணைத்து என்றும் எமைக்காக்க வேண்டுமைய்யா
எட்டியாந்தோட்டையிலே இருந்தருளும் விநாயகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.