ஊவா மாகாணம் – மொனராகலை மாவட்டம் கதிர்காமம், செல்லக் கதிர்காமம் – அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
மாணிக்க கங்கை மத்தியிலே அமர்ந்தருளும் பிள்ளையார்
எம் மனக்கவலை போக்கிடவே வழியமைப்பார் நமக்கு
துன்பங்கள் அண்டாமல் துடைத் தெறிவார் என்றும்
அவர் செல்லக் கதிர்காமத்தில் கோயிலமர் பிள்ளையார்
வேலவனாம் தம்பி கோயில் கொண்ட பதியமர்ந்த பிள்ளையார்
வேண்டும் நலம் தந்தெமக்கு அருளிடுவார் நமக்கு
தீயபகை, கொடுமை அண்டாமல் துடைத் தெறிவார் என்றும்
அவர் செல்லக் கதிர்காமத்தில் கோயிலமர் பிள்ளையார்
வேண்டும் வரம் தந்தெம்மை வழிநடத்தும் பிள்ளையார்
தப்பில்லா வழியினிலே வாழவழியமைப்பார் நமக்கு
நோய் நொடிகள் அண்டாமல் துடைத் தெறிவார் என்றும்
அவர் செல்லக் கதிர்காமத்தில் கோயிலமர் பிள்ளையார்
அஞ்சாத மனவுறுதி அளித்தருளும் பிள்ளையார்
அச்சமில்லா வழியினிலே இருந்திடவே வழியமைப்பார் நமக்கு
ஆபத்துகள் அண்டாமல் துடைத் தெறிவார் என்றும்
அவர் செல்லக் கதிர்காமத்தில் கோயிலமர் பிள்ளையார்
ஆறுதலைத் தந்தெம்மை ஆட்சி செய்யும் பிள்ளையார்
ஆதரித்து அரவணைத்து வாழவழியமைப்பார் நமக்கு
ஆசைகள் அண்டாமல் துடைத் தெறிவார் என்றும்
அவர் செல்லக் கதிர்காமத்தில் கோயிலமர் பிள்ளையார்
அறிவு தந்து ஆற்றல் தந்து வாழவைக்கும் பிள்ளையார்
ஆணவமின்றி வாழ வழியமைப்பார் நமக்கு
தொல்லைகள் அண்டாமல் துடைத் தெறிவார் என்றும்
அவர் செல்லக் கதிர்காமத்தில் கோயிலமர் பிள்ளையார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.