Kovil
நுவரெலியா – ஹங்குரங்கெட்டை ஹேவாஹெட்ட, ராத்துங்கொட தோட்டம் அருள்மிகு முத்து மாரி அம்மன் திருக்கோயில்
மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், ஹங்குரங்கெட்டை ஹேவாஹெட்ட, ராத்துங்கொட தோட்டம் அருள்மிகு முத்து மாரி அம்மன் திருக்கோயில்
அருள் தந்து ஆதரிக்கும் அன்னை முத்துமாரி
மருள் போக்கி வாழ்வளிக்க வந்தமர்ந்தாள் இங்கு
நம்பியவள் அடி தொழுவோம் நலன் பெறுவோம் நாங்கள்
ராத்துகொட தோட்டத்தில் கோயில் கொண்ட முத்துமாரி வாழவைப்பாள் எம்மை
இயற்கையையே இயக்குவிக்கும் அன்னை முத்துமாரி
பயமில்லா வாழ்வளிக்க வந்தமர்ந்தாள் இங்கு
அவள் துணையை நாடி பயன் பெறுவோம் நாங்கள்
ராத்துகொட தோட்டத்தில் கோயில் கொண்ட முத்துமாரி வாழவைப்பாள் எம்மை
மலை சூழ்ந்த திருவிடத்தில் காட்சிதரும் அன்னை முத்துமாரி
மலைப்பில்லா வாழ்வுதர வந்தமர்ந்தாள் இங்கு
மதிதவறா நெறி நின்று வளம் பெறுவோம் நாங்கள்
ராத்துகொட தோட்டத்தில் கோயில் கொண்ட முத்துமாரி வாழவைப்பாள் எம்மை
மகிழ்ச்சி தந்து வாழச் செய்யும் அன்னை முத்துமாரி
மாண்புமிகு வாழ்வுதர வந்தமர்ந்தாள் இங்கு
முயற்சியுடன் முன்னேறும் வழிகாண்போம் நாங்கள்
ராத்துகொட தோட்டத்தில் கோயில் கொண்ட முத்துமாரி வாழவைப்பாள் எம்மை
பேச்சியம்மன் என்ற பெயர் கொண்ட அன்னை முத்துமாரி
பேதலிக்கா வாழ்வு தர வந்தமர்ந்தாள் இங்கு
பெருமை மிகு வாழ்வு பெற்று உயர்வடைவோம் நாங்கள்
ராத்துகொட தோட்டத்தில் கோயில் கொண்ட முத்துமாரி வாழவைப்பாள் எம்மை
அன்பு கொண்டு அரவணைக்கும் அன்னை முத்துமாரி
அச்சம் களைந்தெமக்கு அருள் தரவே வந்தமர்ந்தாள் இங்கு
ஆறுதலைப் பெற்று நல்லருள் பெறுவோம் நாங்கள்
ராத்துகொட தோட்டத்தில் கோயில் கொண்ட முத்துமாரி வாழவைப்பாள் எம்மை.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.