Kovil
யாழ். நெல்லியடி வதிரி அருள்மிகு பூவற்கரை பிள்ளையார் திருக்கோயில்
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், நெல்லியடி வதிரி அருள்மிகு பூவற்கரை பிள்ளையார் திருக்கோயில்
நெஞ்சில் நிறைந்திருந்து நல்லருளைத் தரும் ஐயா
நித்தம் உடனிருந்து வாழ்வளிக்க வாருமைய்யா
நாவினிலே நீயிருந்து நல் வார்த்தை தரவேண்டும்
வதிரியிலமர்ந்த பூவக்கரை பிள்ளையாரே
தெளிவான அருள்தந்து திருவருளைத் தரும் ஐயா
தினமும் அருகிருந்து நலமளிக்க வாருமையா
துணையிருந்து நல்லுறவு வலுப்பெற வரம் தர வேண்டும்
வதிரியிலமர்ந்த பூவக்கரை பிள்ளையாரே
அருள் தந்து அரவணைக்கும் திருவருளே ஐயா
அன்புதந்து ஆதரிக்க விரைந்து நீ வாருமைய்யா
அச்சமின்றி நாம் வாழ உரியவழி தர வேண்டும்
வதிரியிலமர்ந்த பூவக்கரை பிள்ளையாரே
தேரேறிப் பவனி வந்து அருள் பொழியும் ஐயா
தெளிந்த வழி காட்டியெமக்கு வாழ்வளிக்க வாருமைய்யா
தொல்லையில்லா நல்வாழ்வை என்றும் நீ தர வேண்டும்
வதிரியிலமர்ந்த பூவக்கரை பிள்ளையாரே
உற்ற துணையாயிருந்து ஆறுதல் தரும் ஐயா
உலகிற்கு நலமருள விரைந்து நீ வாருமைய்யா
உறவுகள் உறுதிபெற உரியவழி தரவேண்டும்
வதிரியிலமர்ந்த பூவக்கரை பிள்ளையாரே
தமிழ் ஒலிக்கும் திருநிலத்தில் கோயில் கொண்ட தெய்வமே ஐயா
தடுமாறா மனம் தந்து காத்தருள வாருமைய்யா
துணையிருந்து அருள் செய்து துன்பங்களைப் போக்க வேண்டும்
வதிரியிலமர்ந்த பூவக்கரை பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.