Kovil
யாழ். புங்குடுதீவு – அருள்மிகு ஸ்ரீ இராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில்
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவு அருள்மிகு ஸ்ரீ இராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில்
உலகாளும் திருமகளே தாயே இராஜேஸ்வரி
உத்தமமாய் வாழ்ந்திடவே உன்கருணை வேண்டுமம்மா
சித்தம் நிறைந்திருந்து நல்ல வழி காட்டிடம்மா
புங்குடுதீவு கோயிலுறை அம்மா எமைக் காப்பாய்
அனைத்துலகும் நலம் வாழ அருளளிக்கும் தாயே இராஜேஸ்வரி
அச்சமின்றி வாழ்ந்திடவே உன் அருளே வேண்டுமம்மா
அகத்தில் உறைந்திருந்து அறிவு வழி காட்டிடம்மா
புங்குடுதீவு கோயிலுறை அம்மா எமைக் காப்பாய்
நேர்வழியில் வழிநடத்தும் தாயே இராஜேஸ்வரி
நித்தமும் உன்கருணை எமக்காக வேண்டுமம்மா
போகும் வழி நல்வழியாய் இருக்க வழி காட்டிடம்மா
புங்குடுதீவு கோயிலுறை அம்மா எமைக் காப்பாய்
பெருமைமிகு வாழ்வு தந்து வழிநடத்தும் தாயே இராஜேஸ்வரி
போதுமென்ற மனம் கொண்டு வாழும்வழி வேண்டுமம்மா
பெருமையுடன் வாழும் வழி அடைய வழி காட்டிடம்மா
புங்குடுதீவு கோயிலுறை அம்மா எமைக் காப்பாய்
நெஞ்சம் நிறைந்திருந்து அமைதி தரும் தாயே இராஜேஸ்வரி
நிலையான உன் காவல் எமக்காக வேண்டுமம்மா
நோயின்றி நொடியின்றி வாழ வழி காட்டிடம்மா
புங்குடுதீவு கோயிலுறை அம்மா எமைக் காப்பாய்
பக்தியுடன் அடிபணிவோர் நலன் காக்கும் தாயே இராஜேஸ்வரி
பெருமையுடன் நின்னருளால் வாழும் வழி வேண்டுமம்மா
பொறுமை கொண்ட மனத்தினராய் இருக்க வழி காட்டிடம்மா
புங்குடுதீவு கோயிலுறை அம்மா எமைக் காப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.