Kovil

நுவரெலியா – கிரிவன்எலிய அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம் – கிரிவன்எலிய அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

பசுமை நிறை மலையகத்தில் கிரிவன்எலிய இருந்தருளும் தாயே
பாவங்கள் இல்லாநிலை தந்து அருளிடவே வந்திடம்மா
பாசமுடன் உன்னடியைத் தொழுது நிற்கும் மக்களுக்கு
மீட்சி தந்து வாழ்வளிக்க விரைந்து நீ கருணை செய்வாய் முத்து மாரியம்மா

மாசில்லா மனம் கொண்டு அருள் பொழியும் தாயே
மாநிலத்தில் செம்மையுடன் வாழும் வழி அருளிடவே வந்திடம்மா
நம்பி வந்து உன்னடியைத் தொழுது நிற்கும் மக்களுக்கு
மீட்சி தந்து வாழ்வளிக்க விரைந்து நீ கருணை செய்வாய் முத்து மாரியம்மா

அருவிகள் நிறைந்துள்ள மலையகத்தில் கோயில் கொண்ட தாயே
அச்சமில்லா வாழ்வினையே தந்து நீ அருளிடவே வந்திடம்மா
அருள் நாடி உன்னடியைத் தொழுது நிற்கும் மக்களுக்கு
மீட்சி தந்து வாழ்வளிக்க விரைந்து நீ கருணை செய்வாய் முத்து மாரியம்மா

நம்பித் தொழும் நல்லடியார் நலன் காக்கும் தாயே
நேர்மைமிகு நல்வாழ்வைத் தந்து நீ அருளிடவே வந்திடம்மா
நிம்மதியை நாடி உன்னடியைத் தொழுது நிற்கும் மக்களுக்கு
மீட்சி தந்து வாழ்வளிக்க விரைந்து நீ கருணை செய்வாய் முத்து மாரியம்மா

நீதி தவறா வழிநின்று அருளளிக்கும் தாயே
நிலைபெற்ற வாழ்வைத் தந்து நீ அருளிடவே வந்திடம்மா
நோயற்ற வாழ்வு நாடி உன்னடியைத் தொழுது நிற்கும் மக்களுக்கு
மீட்சி தந்து வாழ்வளிக்க விரைந்து நீ கருணை செய்வாய் முத்து மாரியம்மா

நிலையான நிம்மதியைத் தந்தருளும் தாயே
நித்தம் உன் கருணை தந்து நீ அருளிடவே வந்திடம்மா
துணிவு தேடி உன்னடியைத் தொழுது நிற்கும் மக்களுக்கு
மீட்சி தந்து வாழ்வளிக்க விரைந்து நீ கருணை செய்வாய் முத்து மாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top