வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அருள்மிகு உடுக்கியவளை மகா கணபதிப் பிள்ளையார் திருக்கோயில்
ஆறுதல் தந்தெம்மை அரவணைக்கும் பெருமானே
அச்சமில்லா நிம்மதியைத் தந்தருள வேண்டுமைய்யா
துணிவுடனே நிமிர்ந்து நிற்க வழிவகை செய்திடைய்யா
வட்டுக்கோட்டை மகாகணபதிப் பெருமானே
வேதனைகள் போக்கியெம்மை மகிழ்விக்கும் பெருமானே
வேற்றுமைகள் போக்கி அருள வேண்டுமைய்யா
நேர்மையுடன் துணிந்து நிற்க வழிவகை செய்திடைய்யா
வட்டுக்கோட்டை மகாகணபதிப் பெருமானே
இன்பநிலை தந்தெம்மை உயர்த்தி விடும் பெருமானே
இச்சையில்லா நல்வாழ்வைத் தந்தருள வேண்டுமைய்யா
இதயத்தில் தூய்மை நிறைய வழிவகை செய்திடைய்யா
வட்டுக்கோட்டை மகாகணபதிப் பெருமானே
எழுச்சி தந்து எம் நிலைமை உயர்த்தி விடும் பெருமானே
எழுச்சி கொண்டு நாம் வாழ உன்னருளே வேண்டுமைய்யா
உள்ளத்தில் உறுதி நிறைய வழிவகை செய்திடைய்யா
வட்டுக்கோட்டை மகாகணபதிப் பெருமானே
சிவனாரின் முதல் மகனாய் அவதரித்த பெருமானே
சிந்தனையில் தூய்மையைத் தந்தருள வேண்டுமைய்யா
சுகம் கொண்டு நாம்வாழ வழிவகை செய்திடைய்யா
வட்டுக்கோட்டை மகாகணபதிப் பெருமானே
தொன்மைமிகு இவ்வுலகைத் தாங்கி நிற்கும் பெருமானே
தொல்லையில்லா நல்வாழ்வைத் தந்தருள வேண்டுமைய்யா
நோய்நொடிகள் அண்டாது வாழ வழிவகை செய்திடைய்யா
வட்டுக்கோட்டை மகாகணபதிப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.