நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழைத்துடனான காலநிலை காரணமாக, 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (15) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட எச்சரிக்கை (Level 2 – Amber Watch)காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்போர் அதிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெலுவகளுத்துறை மாவட்டம்: ஹொரணை, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகம இரத்தினபுரி மாவட்டம், பெல்மடுல்ல முதலாம் கட்ட எச்சரிக்கை (Level 1 – Yellow Watch)பின்வரும் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கண்டிதும்பனை, பஸ்பாகே, தொலுவ, யட்டிநுவர, உடபலாத, கங்க இஹல கோரளை, அக்குரணை, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர, புஜாபிட்டிய, கங்கவட்ட கோரளை, பாதஹேவாஹெட்ட, ஹத்தரலியத்த, தெல்தொட்ட, பன்விலகேகாலை அரநாயக்க, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, ரம்புக்கனை, கேகாலை, யட்டியாந்தோட்டை, வரகாபொல ,இரத்தினபுரி கலவானை, அயகம, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட, குருவிற்ற,மொனராகலைவெல்லவாய, பிபிலை, படல்கும்புரபதுளைபண்டாரவளை, ஹாலி-எல, பசறை,நுவரெலியா,நோர்வூட், கொத்மலை வடக்கு, அம்பன்கங்கை கோரளைகாலிநியகம, தவலம, எல்பிட்டியகளுத்துறை புலத்சிங்கள, இங்கிரிய மாத்தளை நாவுல, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை குருநாகல் ,ரிதிகம,மாத்தறை,பிடபெத்தர
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள்/மின் கம்பங்கள் சாய்வடைதல் அல்லது திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் போன்ற மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.