இன்று முதல் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
காஸ் சிலிண்டர்கள் அடங்கிய இரண்டு கப்பல்களுக்கு நேற்றிரவு (17/05/22) பணம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இற்கமைவாக 2,800 மெட்ரிக் தொன் காஸை தரையிறக்கும் பணி நேற்றிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.