இன்று முதல் மீண்டும் விஹார மஹாதேவி பூங்காவில் கொவிட் தடுப்பூசி

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இராணுவ கொவிட் தடுப்பு தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் செயற்படுத்தப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையான ஆறு நாட்களிலும காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

20 வயதுக்கு மேற்பட்டவர்களும்இ 4வது கொவிட் தடுப்பூசியைப் பெற விரும்புபவர்களுக்கும் இங்கு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *