News

மட்டக்களப்பில் டெங்கு: இருவர் உயிரிழப்பு

டெங்கு நோயால் இரு இளம் குடும்பஸ்தர்கள் ,மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் நேற்றுவரை சுமார் 240 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, நாட்டில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு
மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நேற்று முன்தினம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top