இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்ப நிலைக்காரணமாக மலையக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது என சர்வமத தவைர்கள் தெரிவிக்கின்றனர்.
கரித்தாஸ் கண்டி செட்டிக் நிறவனத்தின் பெருந்தோட்ட பிரிவு இன்று (23.05.2022) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அட்டன் நகரத்தின் சர்மத தலைவர்களான அட்டன் நீக்ரோதாராம விகாரைதிபதி மாகம விமலதர்ம தேரர், அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நீயுமேன் பீரிஸ், அகில இலங்கை இந்து மகா சங்க தலைவர் தேசகீர்த்தி சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா, அகில இலங்கை ஜமைத் உலமாவின் அட்டன் கிளையின் உப தலைவர் மௌவி எம்.எஸ்.எம் ஹீசைன் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்….
மலைநாட்டிற்கு வந்து 200 வருடங்கள் ஆகும் இந்த நிலையிலும் அவர்களின் சம்பள உயர்வு, வாழ்க்கை தரம், கல்வி என அனைத்துமே அடி மட்டத்தில்தான் உள்ளது. இந்நிலையில் தற்போதய நிலை அவர்களை முற்றாக முடக்கி வாழ முடியாதாக்கியுள்ளது என தெரிவித்தனர். கடந்த 72 வருடங்களாக எம் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை நேசிக்கும் தலைவர்களை உருவாக்காமையே இன்றைய நாட்டின் சாபகேட்டிற்கு காரணமாகும். இதன் பிறகாவது நாம் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியல் தலைவர்களை தெரிவு செய்யும் மன நிலையை உருவாக்கிட வேண்டும் என்றனர்.
இலங்கைக்கு அந்நிய செலாவணியை தேடி தருவது இந்த தேயிலை ஏற்றுமதியே, ஆனால் எமது மலையக மக்கள் ஒரு வேலை உணவை பெற்றக் கொள்வதும் மிகவும் துன்பகரமானதாக காணப்படுகின்றது என்று ஆதங்கப்பட்டனர்.
இந்நிலைக்கு காரணமான ஜனாதிபதி, பிரதமர் மற்றம் இவர்களுக்கு இசைப்பாடிய 225 பாராளுமன்ற உறுப்பினர்களையம் மக்கள் வெறுக்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.
மலையக மக்களின் இன்றைய நிலைக்கு முற்று முழுதான காரணம் மலையகத்தில் இருக்கும் முதுகெழும்பு இல்லாத அரசியல்வாதிகளே. கட்சி சார்ந்த தன்னுடைய சுயநல அரசியலை முன்னெடுத்ததால்தான். 200 வருடங்களாக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்தும் எமது மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பட்டினி சாவை எதிர் கொண்டு உள்ளமைக்கு இந்த அரசியல்வாதிகளே காரணமாகியுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தினர்.
இன்றைய மலையக தாய்மார்கள் அதிகமான நேரம் தேயிலை மலைகளில் கொழுந்து கொய்யும் தொழிலேயே கஸ்டப்படுகின்றார்கள். காலை மற்றும் இரவு ரொட்டி சாப்பிட்டு இடையில் தேனீர் அருந்தி தமது தொழிலை முன்னெடுக்கின்றார்கள் என்றும் தெரிவித்தனர்.
மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் நாமும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை பெற்று தர கடமைப்பட்டுள்ளோம் என்றும் சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.
|
மலையக மக்கள் ஒரு வேலை உணவுக்கும் தடுமாறும் நிலை
By
Posted on