பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாசார மண்டபம் தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் வடிவேல் சுரேஷ் அவர்கள் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் சபையில் முறுகல் நிலை
2019 ஆம் ஆண்டு பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாசார மண்டபங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு இடைநடுவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இன் றைறைய பாராளுமன்ற அமர்வில் இவ்விடயம் தொடர்பில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவிடம் வடிவேல் சுரேஷ் அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார் இக் கேள்விக்கு பதிலளித்த பிரசன்ன ரணதுங்க அமைச்சர் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கூட உரிய இட ஒதுக்கீடு இல்லாமையினாலேயே இவ் வேலைத்திட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது என தெரிவித்தார்
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சபையில் வடிவேல் சுரேஷ் அவர்கள் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவித்தார்
2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் காலப்பகுதியில் பதுளையில் 16 கலாசார மண்டபங்கள் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து அவ்வேளை திட்டத்திற்க்குறிய மதிப்பீட்டு அறிக்கை அரசாங்க உத்தியோகஸ்த்தர்களினால் தயார் செய்யப்பட்டு முற்பணமும் செலுத்தப்பட்டது இவை அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது.
மேலும் இவ்வேளை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது இட ஒதுக்கீடு இல்லாமல் எவ்வாறு அடிக்கல் நாட்ட முடியும்? அரசியல் சூழ்ச்சியினாலும் அதிகாரிகளின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளினாலுமே இவ் வேலைத்திட்டம் மலையக மக்களுக்கு சென்றடையாமல் இடைநடுவே நிறுத்தப்பட்டது மலையக மக்கள் தீவிரவாதிகள் இல்லை தொடர்ந்தும் இந்த நாட்டிற்காக குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்தியாவில் இருந்து வரும் உதவிகளை மட்டும் பெறுவதற்கு இங்கு உள்ள அனைவரும் வரிசையில் காத்து இருக்கிறார்கள் ஆனால் அங்கிருந்து இங்கு வந்து பல இன்னல்களையும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கோ சிந்திப்பதற்கு சபையில் ஒருவரும் இல்லை என அவர் தெரிவித்தார்
Attachments area