நுவரெலியா – பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்)

இலங்கையில் தட்டுப்பாடாக இருக்கின்ற லாப் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இரு மாதங்களுக்கு மேலாக லாப் கேஸ் வழங்கப்படாத நிலையில் நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக விநியோகம் இடம்பெற்றது.

லாப் கேஸ் விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 1150 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு  பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.  இதன் போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்  தொழில் புரிவோருக்கு வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *