இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலும் இன்புளுவன்சா தொற்றினால் 14 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித கினிகே கூறினார்.
தற்போது பரவுகின்ற இந்த வைரஸ் இன்புளுவன்சா “A” வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெரும்பாலானவை இன்புளுவன்சா “A” என அடையாளம் காணப்பட்டுள்ளன. இது ஒருவருக்கு பொதுவாக காய்ச்சல், இருமல், சளி அல்லது உடல்வலியுடன் மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஆனால் விசேடமாக கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகளும் பொதுவாக தொற்றுக்குள்ளாகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை 27,454 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் (6,586) கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 3,710 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2,969 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.