வறிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட எல்பீங் நுவரெலியா சங்கம் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் வறிய குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரமும், கற்றலைத் தொடர முடியாத குடும்பங்களுக்கு உதவி கரம் நீட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் எல்பீங் நுவரெலியா என்ற பெயரில் சங்கம் ஒன்று இன்றைய தினம் (12/11/22) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வின் போது நுவரெலியாவில் மாவட்ட பிரதேச செயலாளர்கள் , கல்வி பணிப்பாளர்கள் வைத்தியர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என சில முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
டி சந்ரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *