அகில இலங்கை பாடசாலைமட்ட கர்நாடக சங்கீதப்போட்டி-2022 மாகாணமட்ட போட்டியில் நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் மூன்றில் நு/லோவர் கிரன்லி த.வி மாணவர்களில் வாத்திய இசை நாதஸ்வர போட்டியில் டி .சதுர்ஷன் பங்குபற்றி மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தனி இசை போட்டியில் சி .பிரசன்னா மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார். பாடசாலை வரலாற்றில் இப்போட்டிகளில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்க்க பயிற்றுவித்த சங்கீத ஆசிரியர் ம.சிவயோகன் அவரையும் வழிகாட்டிய மதிப்பிற்குரிய அதிபர் கே பாலகிருஸ்ணன் அவர்களையும் வெற்றி பெற்ற மாணவர்களையும் வாழ்த்துகின்றோம்.