புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை [SPDC] இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) கற்கைநெறிகளுக்கான நிதி உதவியினை அவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
மேலேகூறப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக இலங்கையில் உள்ள மாணவர்கள் இந்தபுலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை http://www.spdcindia.gov.in/login/guideline.php. என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். தகுதியுடைய விண்ணப்பதாரிகள் 2022 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு