ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் கொட்டகலை ராகம் இசைக்குழுவின் தலைவர் சி வகுக்காரன் ராஜா அவர்களின் புதல்வி தனூஷா கர்நாடக சங்கீத தனி இசைப்போட்டியில் வலயமட்டம் ரீதியாக நுவரெலியாவிலும் ,மாகாணமட்டத்தில் கண்டியிலும் முதலாம் இடம் பெற்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.இதற்கு உறுதுணையாக இருந்த சங்கீத பாட ஆசிரியர் திருமதி.சச்சினி அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் திருமதி.இமெல்டா அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
