க.பொ.த சாதாரண தர பரீட்சை 23.05.2022 திங்கட்கிழமை இலங்கை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3844 பரீடசை நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பரீட்சைக்கு 517496 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
கடந்த டிசம்பர் (2021) மாதம் நடைபெற இருந்த இந்த பரீட்சையானது நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று காரணமாக ஐந்து மாதங்கள் கடந்து 23.05.2022 இன்று ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில், மலையக மாணவர்களும் இன்றைய தினம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றினர். மலையகத்தில் காணப்பட்ட மழையுடனான காலநிலைக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்தனர்.
தற்போதய நாட்டின் நெருக்கடியான பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் இந்த மாணவர்கள் தமது வாழ்க்கையின் முதல் படியை கடப்பதற்காக பரீட்சை நிலையத்திற்கு அருகிலும் கற்றல் செயற்பாடுகளை இறுதி நிமிடம் வரை முன்னெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது.
இன்று 23.05.2022 முதல் நாள் சமய பாடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதுடன் இந்த பரீட்சையானது 01.06.2022 புதன்கிழமை நிறைவடைய உள்ளது.