லங்கா விசன் எக்சன் ஃப்வ்டேசன் சமூக சேவை நிறுவனமான நாம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிமிகு சூழ்நிலையில் மக்களின் உணர்வினை அறிந்து அவர்களின் முன்னேற்றத்திகாய் பல்வேறு நிகழ்ச்சி திட்டத்திங்களை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த ஐந்து மாதக்காலமாக தோட்டப்பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட ‘ Meals for mind’ நிகழ்ச்சி திட்டத்தில் இதுவரையில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
குறித்த திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக தலவாக்கலை லிந்துலை – மட்டுகல்லை தோட்டம் கேனர்ஸ் பிரிவைச்சேர்ந்த சுமார் 100 பேருக்கு தொடர்ச்சியாக ஒருவேளை உணவினை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று 11.11.2022 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் Hayleys plantation மனித வள மேலாளர் இராம், திருகேஷ்வரன் EMI மட்டுகல்லை தோட்டம் மற்றும் சிவயோகன் – உப தலைவர்/ ஆலோசகர் Act Sri Lanka ஆகியோரின் பங்கேற்புடன் லங்கா விசன் எக்சன் ஃப்வ்டேசன் சதீஷ் கண்ணா – நிதி நிர்வாகி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
