ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான வ.சிவஜோதியின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ”உறுதிகொண்ட நெஞ்சினாள்” நூல் வெளியீடும் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கும் விழாவும் எதிர்வரும் 20.11.2022 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் அரங்கில் நடைபெற இருக்கின்றது.
லிற்றில் எய்ட் நிறுவனத்தின் செயலாளரும் ஆசிரியருமான ப.தயாளன் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.
குறித்த நிகழ்வு இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. அந்தவகையில் முதலாவது அமர்வில் லிற்றல் எய்ட் மாணவர்கள் தமிழ் வாழ்த்து பாட லிற்றில் எய்ட் மாணவி இ.குகப்பிரியா வரவேற்பரையை வழங்கவிருக்கின்றார்.
முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீமகேஷ்வரநாத சர்மா (பிரதமகுரு மீனாட்சி அம்மன் கோயில் ஜெயந்திநகர், கிளிநொச்சி) (பொறுப்பமைய குரு கருணாநிலையம்) எஸ்.கே.டானியல் ஆகியோர் ஆசியுரை வழங்குவார். கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட கலை கலாசார அலுவலர், வி.குணபாலா தலைமையுரையாற்றுவார். எழுத்தாளர் சி.கருணாகரன் சிறப்புரையாற்றுவார்.
லிற்றில் எய்ட் மாணவி செல்வி கிறிஸ்ரியனா அஞ்சலிப்பா வழங்க சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரக்குமார் சிவஜோதியின் நினைவுப் பகிர்வை வழங்க இருக்கின்றார்.
அமர்வு இரண்டில்
செல்வி வர்ஷனா வரதராசா தலைமையுரையாற்றுவார், செல்வி விராஜினி கயாத்திரி இராஜேந்திரன் வெளியீட்டுரையாற்றுவார், முதற் பிரதியை செல்வி அபிலாஷா தேவராஜா பெற்றுக்கொள்லவிருக்கின்றார். உறுதிக்கொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம் என்ற தலைப்பில் செல்வி மாதவி உமாசுதசர்மாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் செல்வி மயூரகா ஸ்ரீகந்தராசாவும், உறுதிகொண்ட நெஞ்சினாள்களின் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை என்ற தலைப்பில் நிவேதா சிவராஜா ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.
தொடர்ந்து வ.சிவஜோதியின் ஞாபகார்த்த நினைவு விருது வழங்கப்படவுள்ளது. ஏற்புரையை திருமதி ஹ.சிவஜோதி வழங்கவுள்ளார். நன்றியுரையை திரு.சி.வயீத்தீஸ்வரன் வழங்கவிருன்றார்.