ஹைலன்ட்ஸ் கல்லூரியின் “குறிஞ்சி சொற்சமர்” விவாதக்கழகம் பழையமாணவர் ஒன்றியத்தின் அனுசரணையோடு கலைப்பிரிவு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத போட்டி நேற்று 12.11.2022 அன்று கல்லூரியின் அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது ஹட்டன் வலயத்திலுள்ள 21பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்றது.
இரு அமர்வுகளாக இடம்பெற்ற நிகழ்விலே பிரதம அதிதிகளாக
தசேதுரட்ணம் ஐயா( உதவிக்கல்விப்பணிப்பாளர், தேசிய மொழிகள் மானுடவியல் பிரிவு கல்வி அமைச்சு)அவர்களும், பாலசந்திரன்(ஹட்டன் நகரசபை தலைவர்.)அவர்களும் கௌரவ அதிதிகளாக ஹட்டன் கல்விப்பணிமனையின் கல்விப்பணிப்பாளர்கள், பழையமாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
போட்டியின் நடுவர்களாக கல்வியியற் கல்லூரி,அரசினர் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர்கள், பதுளை, நாவலப்பிட்டி,தலவாக்கலை போன்ற நகர பாடசாலைகளின் தமிழாசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் நடுவர்களாக கலந்து கொண்டு எவ்வித விமர்சனங்களும் எழாமல் சிறந்த பணியாற்றினார்கள்.
21 பாடசாலைகள் கலந்து கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை நோர்வூட்.த.மவித்தியாலயமும்
இரண்டாம் இடத்தை பொஸ்கோ கல்லூரியும் மூன்றாம் இடத்தை ஹொன்சி கல்லூரியும் பெற்றதோடு சிறந்த விவாதியாக நோர்வூட் பாடசாலை மாணவன் தெரிவாகியிருந்தார்.
இப்போட்டி புதியதொரு கல்வி கலாசாரத்தை வழங்கியிருந்தமை சிறப்பாகும்.சிறந்த திட்டமிடல், கலைப்பிரிவு மாணவர்களின் தனித்துவ ஆளுமைகளை வெளிக்காட்டியமை சிறப்பம்சமாகும்.