மாத்தறை மாவட்ட தெனியாய சென்மெத்தியூஸ் சிங்கள, தமிழ் கலவன் பாடசாலையின் தமிழ் பிரிவில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள 05 தமிழ் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம் 05 புலமை பரிசில் பரிட்சைக்கு தோற்றுவிக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 15/11/2022 அன்று இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கை சிலோன் யூத் மூமன்ட் மற்றும் பிரதேச பிரஜாசக்தி நிலைய இணைப்பாளர் ராஜநாயகம் கஸ்தூரியும் ஒழுங்கு செய்திருந்தினர்.
மிகவும் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான இந்த கருத்தரங்கில் விரிவுரை வழங்க ஹம்பாந்தொட்டை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் டீ .எப் .ஷூஹுட் கலந்துகொண்டார்.