News

கந்தப்பளை-மூத்த மகனால் தந்தை பொல்லால் தாக்கி கொலை

(அந்துவன்)

 

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று அண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைதும்  செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top