டி சந்ரு
நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தகால நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த இரு கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 03.04.2023 மற்றும் 04.04.2023 ஆகிய இரு தினங்களில் நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் (சினிசிட்டா மைதானம்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது இவ்விரு கல்லூரிகளின் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக அமையப்படவுள்ளது.
இந்த நிலையில் இப் போட்டி தொடர்பாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நுவரெலியா கிறேன்ட் உல்லாச ஹோட்டலில் (23.03.2023) காலை இடம்பெற்றது.
நுவரெலியா பரிசுத்த திருத்துவ தேசிய கல்லூரி அதிபர் எஸ்.ரவிசந்திரன், மற்றும் காமினி தேசிய கல்லூரியின் அதிபர் டப்ளியூ.எம்.நிமால்குமார ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் கல்லூரிகளின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட இரு கல்லூரிகளின் கிரிகெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.
மேலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கிரிகெட் சுற்று போட்டி தொடர்பில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் (02.04.2023) அன்று நுவரொலியா மாநகரில் வாகன பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.