கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை சல்லி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
வற்றாத கருணையினை வழங்கிவரும் தாயே முத்துமாரி
வாழ நல்ல வழிகாட்டி நெறிதவறா வாழ்வு தாராய்
நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய்ப் பெற்றுவிட
அருள் தருவாய் சல்லியம் பதியமர் எங்கள் முத்துமாரியம்மா
அலைமோதும் பெருங்கடலின் அருகமர்ந்த தாயே முத்துமாரி
அசையாத மனவுறுதி தந்தருள விரைந்து வாராய்
அஞ்சாத வாழ்வதனை என்றுமே நாம் பெற்றுவிட
அருள் தருவாய் சல்லியம் பதியமர் எங்கள் முத்துமாரியம்மா
கிழக்கிலங்கை கோயில் கொண்டு காட்சிதரும் தாயே முத்துமாரி
கிலேசமில்லா வாழ்வுக்கு உறுதியை நீ தாராய்
குன்றாத மனவலிமை நாம் என்றும் பெற்றுவிட
அருள் தருவாய் சல்லியம் பதியமர் எங்கள் முத்துமாரியம்மா
தொட்டதெல்லாம் துலங்கச் செய்யும் தாயே முத்துமாரி
தொல்லையில்லா வாழ்வுக்கு உறுதியை நீ தாராய்
துணை கொண்ட வாழ்வினை நாம் என்றும் பெற்றுவிட
அருள் தருவாய் சல்லியம் பதியமர் எங்கள் முத்துமாரியம்மா
சினம் கொண்டு தீமை செய்வோர் கொட்டமதை அடக்கிவிடும் தாயே முத்துமாரி
சீரான வாழ்வுக்கு உறுதியை நீ தாராய்
சீர்மை நிறை நல்வாழ்வை நாம் என்றும் பெற்றுவிட
அருள் தருவாய் சல்லியம் பதியமர் எங்கள் முத்துமாரியம்மா
தரணிக்கு வளமளிக்கும் தாயே முத்துமாரி
தப்பில்லா வாழ்வுக்கு வழிகாட்டி உறுதியை நீ தாராய்
தெளிவான நல்லறிவை நாம் என்றும் பெற்றுவிட
அருள் தருவாய் சல்லியம் பதியமர் எங்கள் முத்துமாரியம்மா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.