கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக
நிவ்பர்க் தோட்ட காணியை அத்துமீறி கைப்பற்றுவதற்க்கு வெளியார் உட்புகுந்துள்ளனர் தோட்ட நிர்வாகத்தின் உத்தரவுடன் இளைஞர்களும் தொழிலாளர்களும் அவர்களை விரட்டுவதற்கு சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற கைகலப்பில் ஒரு சிலர் காயத்துக்கு இலக்கானதோடு அப்பாவி தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்
அரசாங்கம் பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கு குத்தகைக்கு வழங்கிய காணியில் அத்துமீறி வெளியாட்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் அரசாங்கம் ஹப்புகஸ்தன பெருந்தோட்ட நிர்வாகத்திற்க்கு குத்தகைக்கு வழங்கிய காணியை ப்ரவுனன்ஸ் கம்பெனி உப குத்தகைக்கு எடுத்திருப்பதும் பாரிய குற்றமாகும் .
தோட்ட முகாமத்துவத்தை கையாளும் பொறிமுறையும் சட்டபூர்வமாக தவறான ஒரு நடைமுறையாகும்
அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதை விடுத்துவிட்டு கைகளப்பில் ஈடுபட்டார்கள் என்று போலீசாரும் ராணுவமும் பெருந்தோட்ட பகுதிக்கு உள்நுழைந்து அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது இதன் காரணமாக என்னுடைய தொப்புள் கொடி உறவுகள் உள ரீதியில் பாதிப்படைந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கடந்த 12ம் திகதி பாராளுமன்றத்தில் முன் மொழியிலும் நான் எடுத்துரைத்திருந்தேன்.
தொடர்ந்து இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்ததோடு தோட்ட முகாமைத்துவ அதிகாரியுடனும் போலீஸ் அதிகாரியுடன் இப் பிரச்சனையை சமூகமாக தீர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடினேன்
திங்களன்று கைதானவர்களை பண்டாரவளை கௌரவ நீதிமன்றத்தில் ஒப்படைப்பதோடு அவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரி உறுதியளித்திருந்தார் ..
அவ்வாறு நடைபெறா பட்சத்தில் பாரிய ஒரு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என நான் எச்சரிக்கை விடுக்கின்றேன் …
என தெரிவித்தார்