டி சந்ரு நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்கு எரிவாயு அடுப்பை செயற்படுத்திய போது சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளதாகவும் , இதையடுத்து ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்களும் , ஏனைய வர்த்தக நிலைய ஊழியர்களும் ஒன்றிணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை எனவும் காயமடைந்தவர்கள் மூவரும் 42 , 44 , 63 என வயதுடையவர்கள் எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.