ஐரோப்பா கண்டம்- இங்கிலாந்து ஸ்ரோன்லி அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில்
இங்கிலாந்து நாட்டினிலே கோயில் கொண்ட எம் தாயே
இணையில்லாதவுன் கருணை உலகெங்கும் பரவவேண்டும்
வல்லமை தந்தெம்மை வாழவைக்க வந்திடுவாய்
ஸ்ரோன்லியில் வீற்றிருக்கும் எங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா சரணம்
தாயாக இருந்து இத் தரணியை ஆளும் எம் தாயே
தவிப்பின்றி நிம்மதியாய் வாழவழி தரவேண்டும்
திறமைகளைத் தந்தெம்மை வாழவைக்க வந்திடுவாய்
ஸ்ரோன்லியில் வீற்றிருக்கும் எங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா சரணம்
தேரேறிப் பவனி வந்து திசையெங்கும் அருளும் எம் தாயே
தெளிவான அறிவு தந்து வாழநல் வழிதரவேண்டும்
தோல்வியில்லா வாழ்வு தந்து வாழவைக்க வந்திடுவாய்
ஸ்ரோன்லியில் வீற்றிருக்கும் எங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா சரணம்
தரணியெங்கும் மனிதகுலம் நலம் வாழ அருளும் எம்தாயே
தீராத துன்பங்களைத் தீர்க்க வழி தரவேண்டும்
தொல்லையில்லா வாழ்வு தந்து வாழவைக்க வந்திடுவாய்
ஸ்ரோன்லியில் வீற்றிருக்கும் எங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா சரணம்
வளம் கொண்ட பெருநாட்டில் இருந்தருளும் எம் தாயே
வற்றாத அன்புதந்து வாழவழி தரவேண்டும்
வீரமும் விவேகமும் தந்தெம்மை வாழவைக்க வந்திடுவாய்
ஸ்ரோன்லியில் வீற்றிருக்கும் எங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா சரணம்
வெற்றிமேல் வெற்றி தந்து வாழவைக்கும் எம் தாயே
வெறுப்பில்லா மனநிலையில் வாழவழி தரவேண்டும்
தெளிவான அறிவு தந்து துணிவுடனே வாழவைக்க வந்திடுவாய்
ஸ்ரோன்லியில் வீற்றிருக்கும் எங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா சரணம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.