வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், ஆராய்ச்சிக்கட்டு, குசலை, கொட்டகை, அருள்மிகு ஸ்ரீ ஐயனார் திருக்கோயில்
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமானே
காத்து துணையிருக்கும் உன் கடமை செய்திடைய்யா
காலம் கடக்காமல் உடனிருந்து உதவிடைய்யா
கொட்டகையில் கோயில் கொண்ட ஐயனாரே கேட்டிடைய்யா
மேற்கிலங்கை வீற்றிருந்து துணையிருக்கும் பெருமானே
மேதினியில் நம் நிலைமை மேலோங்கச் செய்திடைய்யா
விரைந்து வந்து நமக்கென்றும் உதவிடைய்யா
கொட்டகையில் கோயில் கொண்ட ஐயனாரே கேட்டிடைய்யா
தீயபகை கொடுமைகளைத் தடுத்து விடும் பெருமானே
தீயவர்கள் தரும் கொடுமை தொலைந்துவிடச் செய்திடைய்யா
துணையிருந்து நமக்கென்றும் நன்மை செய்து உதவிடைய்யா
கொட்டகையில் கோயில் கொண்ட ஐயனாரே கேட்டிடைய்யா
சூழ்ந்து வரும் வேதனைகள் துடைத் தெறியும் பெருமானே
சூழ்நிலைகள் நலமாக்கி வாழவழி செய்திடைய்யா
சுற்றம் சூழ மகிழ்வுடனே நாம் வாழ உதவிடைய்யா
கொட்டகையில் கோயில் கொண்ட ஐயனாரே கேட்டிடைய்யா
நன்மைகள் நாடி வர அருளுகின்ற பெருமானே
நாளும் பொழுதும் நன்மைகள் நாடிவரச் செய்திடைய்யா
நேர்மையாய் என்றும் வாழ அருள் செய்து உதவிடைய்யா
கொட்டகையில் கோயில் கொண்ட ஐயனாரே கேட்டிடைய்யா
நேர்வழியைக் காட்டி எம்மை வழிநடத்தும் பெருமானே
நொந்து மனம் வாடாமல் இருந்திடவே செய்திடைய்யா
நோய் நொடிகள் அண்டாமல் துணை செய்து உதவிடைய்யா
கொட்டகையில் கோயில் கொண்ட ஐயனாரே கேட்டிடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.