வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் ஊர்காவற்றுறை நயினை நாகபூசணி அம்மன் திருக்கோயில்
அலைமோதும் கடல் நடுவே கோயில் கொண்ட தாயே
மன அமைதி தந்தெம்மை வாழவைப்பாய் அம்மா
எம்குறைகள் நிவர்த்தி செய்ய விரைந்திடுவாய் தாயே
நயினை திருவிடத்தில் வந்துறையும் அம்மா
எங்கள் நலன் பேணிடவே வரவேண்டும் தாயே
ஏக்கமில்லா மன அமைதி எமக்கருள வேண்டும்
அன்பு நிறை மனம் கொண்டு நாம் வாழ வேண்டும்
அருள் தருவாய் நயினைத் திருவிடத்தில் வந்துறையும் அம்மா
கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்சி கொள்வாய் தாயே
காவல் செய்து எமையென்றும் காத்தருள்வாய் அம்மா
கொடுபகைமை கேடுகளைத் தடுத்தருள வேண்டும்
காத்து எம்மை ஆதரிப்பாய் நயினைத் திருவிடத்தில் வந்துறையும் அம்மா
அடியவர் பசி போக்கி அருள் அளிக்கும் தாயே
அச்சம் தவிர்த் தெம்மை அரவணைப்பாய் அம்மா
ஆதரவு தந்தெம்மை அரவணைக்க வேண்டும்
அதர்மத்தை அழித்தொழித்து நலமருள்வாய் நயினைத் திருவிடத்தில் வந்துறையும் அம்மா
தம்பித் தொழும் மானிடரின் மனம் மகிழ்விக்கும் தாயே
நேர் வழியில் வாழும் வழி தந்தருள்வாய் அம்மா
நீதி நெறி தவறாத வாழ்வு எமக்கு வேண்டும்
தந்தெம்மை வாழவைப்பாய் நயினைத் திருவிடத்தில் வந்துறையும் அம்மா
துன்பங்கள் துடைத் தெறியும் தூயவளே தாயே
துவளாத மனவுறுதி எமக்களிப்பாய் அம்மா தலைதாழா பெருவாழ்வு எமக்கென்றும் வேண்டும்
நயினைத் திருவிடத்தில் எழுந்துறையும் அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
