மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் சம்மாங்கோட்டு அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
கதிர் ஒளிபரப்பி உலகாளும் வேலவனே முருகா
காசினியில் உன்னருளே நிலைக்க வேண்டும் ஐயா
கிட்டவரும் தீவினைகள் எட்டியே விலகிவிட
அருள் தருவாய் சம்மாங்கோட்டுறை கதிர்வேலாயுதப் பெருமானே
ஆடிவேல் விழாக் காணும் அழகனே முருகா
அச்சமின்றி வாழவுன்னருளைத் தந்தருள வேண்டும் ஐயா
ஆழிசூழ் உலகினிலே நன்மைகள் நிலைத்துவிட
அருள் தருவாய் சம்மாங்கோட்டுறை கதிர்வேலாயுதப் பெருமானே
தேரேறிப் பவனி வந்து திருவருளை வழங்கும் முருகா
தெளிவான வழியிலே நாம் செல்ல வேண்டுமைய்யா
தோல்வி நிலை எமைவிட்டு அகன்றுவிட
அருள் தருவாய் சம்மாங்கோட்டுறை கதிர்வேலாயுதப் பெருமானே
வெற்றி வேல் தாங்கிநின்று வினைபோக்கும் ஐயனே முருகா
வெறுப்புணர்வு இன்றி நாம் வாழ வேண்டுமைய்யா
வேதனைகள் எமைவிட்டு எட்டியே ஓடிவிட
அருள் தருவாய் சம்மாங்கோட்டுறை கதிர்வேலாயுதப் பெருமானே
கேட்டவரம் தந்தெம்மை ஆட்கொள்ளும் வேல்முருகா
கெடுதியின்றி நாம் வாழ உறுதிதர வேண்டுமைய்யா
கொடுமைகள் எமை விட்டு விலகியே அகன்றுவிட
அருள் தருவாய் சம்மாங்கோட்டுறை கதிர்வேலாயுதப் பெருமானே
அருள் தந்து அணைக்கின்ற அழகனே மால் மருகா
ஆதரித்து வழிகாட்டி வழிநடத்த வேண்டுமைய்யா
அந்தரிக்கும் மனம் எமை விட்டு அகன்றிடவே
அருள் தருவாய் சம்மாங்கோட்டுறை கதிர்வேலாயுதப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.