மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் – பொகவந்தலாவை கெம்பியன் மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
வளங் கொண்ட மலையகத்தில் வந்துறையும் மாரியம்மா
நிலைகுலையா நிம்மதியைத் தந்தருள வேண்டுமம்மா
உன் அருளால் நாம் உயர் நிலையைத் தான் அடைவோம்
பொகவந்தலாவை இருந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
தாயாக கருணை செய்து தரணியைக் காப்பவளே
தவறில்லா வாழ்வுதந்து நல்வாழ்வைத் தந்தருள வேண்டுமம்மா
உன்கருணையால் உலகமே நன்மைபெற வேண்டும்
பொகவந்தலாவை இருந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
வற்றாத கருணையினை நித்தம் தந்தருளும் மாரியம்மா
வரும் துன்பம் தடுத்து வளவாழ்வு வேண்டுமம்மா
உன்னணைப்பால் இவ்வுலகம் உயர்நிலையை அடைய வேண்டும்
பொகவந்தலாவை இருந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
தேடிவந்து அருளளிக்கும் தெய்வமே மாரியம்மா
திக்கெட்டும் உன்காவல் நிலைத்திடவே வேண்டுமம்மா
உன்பார்வை இவ்வுலகில் அமைதியையே தரவேண்டும்
பொகவந்தலாவை இருந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
அருள் தந்து ஆதரிக்கும் அன்னை முத்துமாரியம்மா
ஆதரவைத் தந்தெம்மை வாழவைக்க வேண்டுமம்மா
உன் அன்பால் நாமென்றும் மேன்மையுடன் வாழவேண்டும்
பொகவந்தலாவை இருந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்கும் மாரியம்மா
மாநிலத்தில் தலைநிமிர்ந்து வாழவழி வேண்டுமம்மா
மாசற்றவுன் அன்பால் நாம் என்றும் மேன்மையுடன் வாழவேண்டும்
பொகவந்தலாவை இருந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலை வர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.