வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் சுதுமலை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விசுவநாத சுவாமி (சிவன்) திருக்கோயில்
குலம் தளைக்க, வளம் செழிக்க அருளுகின்ற சிவனே
குறையில்லா பெருவாழ்வை உவந்தளிக்க வருவாய்
உன் கருணை எங்களை என்றும் வாழவைக்கும்
சுதுமலையில் கோயில் கொண்ட சிவனே எமக்கருள்வாய்
அன்னை விசாலாட்சியுடன் அமர்ந்தருளும் சிவனே
ஆசி தந்து வாழ்வுயர வழியை நீ தருவாய்
உன்பார்வை எங்களுக்கு என்றும் காவல் தரும்
சுதுமலையில் கோயில் கொண்ட சிவனே எமக்கருள்வாய்
நிலை குலையா நிம்மதியைத் தந்தருளும் சிவனே
நிலை தடுமாறா நிலை கொண்ட வாழ்வை நீ தருவாய்
உன் ஆசி பெற்று நாம் வாழவழி கிடைக்கும்
சுதுமலையில் கோயில் கொண்ட சிவனே எமக்கருள்வாய்
நஞ்சுண்ட கண்டனே நாயகனே சிவனே
நஞ்சில்லா மனத்தினரின் உறவினை நீ தருவாய்
உன் அருள் எங்களுக்கு என்றும் வழி நடத்தும்
சுதுமலையில் கோயில் கொண்ட சிவனே எமக்கருள்வாய்
ஆட்டுவித்து வேடிக்கை பார்க்கின்ற சிவனே
அச்சமில்லா வாழ்வை நீ என்றுமே தருவாய்
உன் காவல் எங்களை என்றுமே காக்கும்
சுதுமலையில் கோயில் கொண்ட சிவனே எமக்கருள்வாய்
தொல்லைகளை அறுத் தெமது துயர் போக்கும் சிவனே
தோல்வியில்லா வாழ்வை என்றும் நீ தருவாய்
உன் அன்பு என்றுமே எம்மை வாழவைக்கும்
சுதுமலையில் கோயில் கொண்ட சிவனே எமக்கருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.