வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், சிலாபம், முன்னேஸ்வரம் அருள்மிகு சித்தார விநாயகர் (வயல் கரைப் பிள்ளையார்) திருக்கோயில்
வயல் கரையில் வந்தமர்ந்து அருளளிக்கும் விநாயகரே
வளம் குன்றா நிறை வாழ்வை அருளிடவே வாருமைய்யா
வாழும் வழி தந்தெம்மைக் காத்திடவே வேண்டுமைய்யா
சிலாபம் கோயில் கொண்ட சித்தார விநாயகரே
வயல் நிலத்தின் மத்தியிலே உறைகின்ற விநாயகரே
வாட்டமின்றி நிம்மதியாய் வாழ வழியமைக்க வாருமைய்யா
திகட்டாத வாழ்வு தந்து எமைக் காத்திடவே வேண்டுமைய்யா
சிலாபம் கோயில் கொண்ட சித்தார விநாயகரே
புத்தளம் பெருநிலத்தில் கோயில் உறை விநாயகரே
புதுவழி காட்டியெம்மை உயர்த்திடவே வாருமைய்யா
பொழுதெல்லாம் உடனிருந்து காத்திடவே வேண்டுமைய்யா
சிலாபம் கோயில் கொண்ட சித்தார விநாயகரே
கேட்டவரம் தந்தெம்மை ஆளுகின்ற விநாயகரே
கெடுதியண்டா நிறை வாழ்வைத் தந்திடவே வாருமைய்யா காலமெல்லாம் உடனிருந்து காத்திடவே வேண்டுமைய்யா
சிலாபம் கோயில் கொண்ட சித்தார விநாயகரே
வயல் சூழ்ந்த பெருநிலத்தில் காட்சிதரும் விநாயகரே
வற்றாத கருணையினை நிதம் அளிக்க வாருமைய்யா
வாழ்வில் வழி தவறாமல் காத்திடவே வேண்டுமைய்யா
சிலாபம் கோயில் கொண்ட சித்தார விநாயகரே
நல்மதியைத் தந்தெமக்கு வழிகாட்டும் விநாயகரே
நித்தமும் உடனிருந்து வழி நடத்த வாருமைய்யா
நேர்மை தவறாமல் வாழும் வழி காத்திடவே வேண்டுமைய்யா
சிலாபம் கோயில் கொண்ட சித்தார விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.