வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – மல்லாகம் அருள்மிகு பெரியதம்பிரான் திருக்கோயில்
ஆதி முதல் காவலனாய் இருந்தருளும் தம்பிரானே
ஆறாத கவலை, பிணி அகற்றி எமைக் காத்தருள்வாய்
தீராத தீயபகை எமைவிட்டு நீங்கிடவே
மல்லாகம் கோயில் கொண்ட பெரியதம்பிரானே அருள்வாய்
உடனிருந்து காவல் செய்து உயர்ச்சி தரும் தம்பிரானே
உரிமையுடன் நாம் வாழ எமக்கருள் செய்வாய்
சூழவரும் தீமைகள் எமைவிட்டு நீங்கிடவே
மல்லாகம் கோயில் கொண்ட பெரியதம்பிரானே அருள்வாய்
ஆக்கம் தந்தெம்மை வாழவைக்கும் தம்பிரானே
அச்சம் அகற்றி யெம்மை நிம்மதியாய் வாழவைப்பாய் அறியாமை எமைவிட்டு நிரந்தரமாய் நீங்கிடவே
மல்லாகம் கோயில் கொண்ட பெரியதம்பிரானே அருள்வாய்
தெளிவான வழிகாட்டி வாழவைக்கும் தம்பிரானே
தொல்லைகள் நெருங்கா வாழ்வு தந்து வாழவைப்பாய்
தோல்வியில்லா எதிர்காலம் எமக்கென்றும் கிட்டிடவே
மல்லாகம் கோயில் கொண்ட பெரியதம்பிரானே அருள்வாய்
நிம்மதி தந்தெம்மை உயர்த்திவிடும் தம்பிரானே
நிதானம் தவறாமல் நன்னிலையில் வாழ வைப்பாய்
நேர்மை வழி நின்று நிம்மதியாய் வாழ்ந்திடவே
மல்லாகம் கோயில் கொண்ட பெரியதம்பிரானே அருள்வாய்
தர்மம் காத்துலகை வாழவைக்கும் தம்பிரானே
தவறில்லா வாழ்வு தந்து நேர்வழியில் வாழவைப்பாய்
தடுமாறும் நிலை எமைவிட்டு நிரந்தரமாய் நீங்கிடவே
மல்லாகம் கோயில் கொண்ட பெரியதம்பிரானே அருள்வாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.