வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், மருதனார்மடம் அருள்மிகு ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் திருக்கோயில்
அஞ்சனை மைந்தனாய் அவதரித்த ஆஞ்சநேயா
அமைதி கொண்ட உலகினையே ஆட்கொள்ள வந்திடுவாய்
என்றும் நிம்மதியாய் நாம் வாழ உறுதி செய்வாய்
மருதனார்மடம் வீற்றிருக்கும் சுந்தர ஆஞ்சநேயப் பெருமானே
வாயு புத்திரனாய் வந்துதித்த ஆஞ்சநேயா
வற்றாத கருணையைத் தந்தெம்மை ஆட்கொள்ள வந்திடுவாய்
என்றும் உறுதியுடன் நாம் வாழ அருளளிப்பாய்
மருதனார்மடம் வீற்றிருக்கும் சுந்தர ஆஞ்சநேயப் பெருமானே
அழிவில்லாப் பெருவாழ்வை உடையவனே ஆஞ்சநேயா
அச்சமின்றி நிம்மதியாய் வாழவழி செய்ய வந்திடுவாய்
என்றும் பெருமையுடன் நாம் வாழ வழி செய்திடுவாய்
மருதனார்மடம் வீற்றிருக்கும் சுந்தர ஆஞ்சநேயப் பெருமானே
தெளிவான அறிவு தந்து வழி காட்டும் ஆஞ்சநேயா
தீயபகை கொடுமைகளைத் துடைத்தெறிய வந்திடுவாய்
என்றும் தொல்லையின்றி நாம்வாழ வழி திறந்திடுவாய்
மருதனார்மடம் வீற்றிருக்கும் சுந்தர ஆஞ்சநேயப் பெருமானே
நம்பித் தொழுது நிற்போர் நலன் காக்கும் ஆஞ்சநேயா
நினைத்த நலன்களெல்லாம் அடைந்திடவே செய்திடுவாய்
என்றும் வளமாக வாழவழி தந்திடுவாய்
மருதனார்மடம் வீற்றிருக்கும் சுந்தர ஆஞ்சநேயப் பெருமானே
வடஇலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் ஆஞ்சநேயா
வாழும் வழி நேர்வழியாய் இருந்திடவே கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து எமைக்காக்க வந்திடுவாய்
மருதனார்மடம் வீற்றிருக்கும் சுந்தர ஆஞ்சநேயப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.