வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளை தண்ணீறூற்று அருள்மிகு ஊற்றங்கரை சித்திவிநாயகர் திருக்கோயில்
தளராத மனம் தந்து அருள் தந்து ஆதரிக்கும் விநாயகரே
திரண்டு வரும் தீமைகளைத் துடைத்தெறிய வந்திடைய்யா
உன்னருளால் உலகமெல்லாம் உய்யவேண்டும் தலைமகனே
ஊற்றங்கரை கோயில் கொண்ட சித்தி விநாயகரே காப்பளிப்பாய்
அழகுமிகு திருவிடத்தில் அமர்ந்தருளும் விநாயகரே
அச்சமில்லா நல்வாழ்வை எமக்களிக்க வந்திடைய்யா
அமைதிமிகு நன்நிலைமை உலகமெல்லாம் நிலவ வேண்டும் தலைமகனே
ஊற்றங்கரை கோயில் கொண்ட சித்தி விநாயகரே காப்பளிப்பாய்
அன்னை உமையாளின் முதல் மகனாய் அவதரித்த விநாயகரே
ஆறுதலைத் தந்துலகைக் காத்தருள வந்திடைய்யா
உன் கருணை எமக்கென்றும் அருள வேண்டும் தலைமகனே
ஊற்றங்கரை கோயில் கொண்ட சித்தி விநாயகரே காப்பளிப்பாய்
நம்பித் தொழும் அடியார் நலன் காக்கும் விநாயகரே
நேர்மை குன்றா வாழ்வினையே தந்தருள வந்திடைய்யா
ஏற்றமிகு உன்னருளை எமக்கென்றும் அருளவேண்டும் தலைமகனே
ஊற்றங்கரை கோயில் கொண்ட சித்தி விநாயகரே காப்பளிப்பாய்
நீர்வளமும், நிலவளமும் கொண்ட தமிழ் மண்ணில் நிலைபெற்ற விநாயகரே
நித்தமும் உன்னருளைத் தந்திடவே வந்திடைய்யா
உன் பார்வை எம்மீது பட்டிடவே வேண்டும் தலைமகனே
ஊற்றங்கரை கோயில் கொண்ட சித்தி விநாயகரே காப்பளிப்பாய்
தண்ணீறூற்று நல்லிடத்தில் காட்சிதரும் விநாயகரே
தவறில்லா உயர் வாழ்வைத் தந்திடவே வந்திடைய்யா
உன்னருளால் எம்வாழ்வு உயர்ச்சி பெறவேண்டும் தலைமகனே
ஊற்றங்கரை கோயில் கொண்ட சித்தி விநாயகரே காப்பளிப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.