வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – ஏழாலை – அருள்மிகு காளி அம்மன் திருக்கோயில்
ஆணவத்தை அழித்தொழித்து அறம் காக்கும் திருமகளே
ஆதரித்து அரவணைத்து காத்தருள வாருமம்மா
நாடியுந்தன் அடிபணியும் எம்மை நீ காத்துவிடு
ஏழாலை கோயில் கொண்ட எங்கள் தாயே காளியம்மா
ஆறாத துயரங்களை ஆற்றுவிக்கும் திருமகளே
அச்சமின்றி நாம் வாழ அருள் தரவே வாருமம்மா
கேட்டவரம் தந்தெம்மை ஆதரிக்க வந்துவிடு
ஏழாலை கோயில் கொண்ட எங்கள் தாயே காளியம்மா
தொல்லைகள் தடுத்தெம்மை வாழவைக்கும் திருமகளே
தெளிவான வழி காட்டி வழிநடத்த வாருமம்மா
நம்பியுன்னை நாடிவரும் எங்களை நீ வாழ விடு
ஏழாலை கோயில் கொண்ட எங்கள் தாயே காளியம்மா
தீயபகை கொடுமைகளைத் துடைத்தெறியும் திருமகளே
தொய்வில்லா வழியினிலே வாழவைக்க வாருமம்மா
குறையின்றி என்றுமே எம்மை என்றும் வாழவிடு
ஏழாலை கோயில் கொண்ட எங்கள் தாயே காளியம்மா
பொறுமையுடனிருந்துலகைக் காக்கின்ற திருமகளே
பெருமையுடன் நாம்வாழ வழி காட்ட வாருமம்மா
பேதமின்றி நல்வழியில் எம்மை நீ வாழவிடு
ஏழாலை கோயில் கொண்ட எங்கள் தாயே காளியம்மா
உள்ளத்தில் உறைந்திருந்து அருளளிக்கும் திருமகளே
உரிமையுடன் நாம் வாழவழி காட்ட வாருமம்மா
வாட்டமின்றி என்றுமே எம்மை வாழவிடு ஏழாலை கோயில் கொண்ட எங்கள் தாயே காளியம்மா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.