வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், அளவெட்டி, அருள்மிகு நாகவரதநாராயணர் திருக்கோயில்
வாழும் வழிகாட்டி வழிநடத்தும் பெருமாளே
வற்றாத கருணை மழை பொழிந்திடவே வாருமைய்யா
தேடியுந்தன் அடி பணிவோர் துயர்போக்கி விட்டிடைய்யா
அளவெட்டி அமர்ந்தருளும் நாகவரதப் பெருமாளே
வெல்லும் வழிதந்தெம்மை வழிநடத்தும் பெருமாளே
வேதனைகள் அண்டாமலே வாழ வழி தந்திடைய்யா
நாடிவந்து அடிபணிவோர் நலன்களைக் காத்திடைய்யா
அளவெட்டி அமர்ந்தருளும் நாகவரதப் பெருமாளே
வேதனைகள் அண்டாமலே
காலமெல்லாம் விழித்திருந்து காக்கின்ற பெருமாளே
கவலையில்லா நல்வாழ்வை ஈந்திடவே வாருமைய்யா
அன்பு நிறை உன்கருணை அடையவே செய்திடைய்யா
அளவெட்டி அமர்ந்தருளும் நாகவரதப் பெருமாளே
வளம் கொண்ட தமிழ் நிலத்தில் அமர்ந்தருளும் பெருமாளே
வெற்றி நிலை உயர்வாழ்வை நீ தந்தருள வாருமைய்யா
கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்கொள்ள வேண்டுமைய்யா
அளவெட்டி அமர்ந்தருளும் நாகவரதப் பெருமாளே
நாராயணா என்றழைத்தால் நலன் வழங்கும் பெருமாளே
நித்திய நிம்மதியைத் தந்திடவே வாருமைய்யா
நத்தியுந்தன் அடி தொழுவோர் நலன் காத்து அருளிடைய்யா
அளவெட்டி அமர்ந்தருளும் நாகவரதப் பெருமாளே
பாற்கடலில் பள்ளிகொண்டு பாராளும் பெருமாளே
பாவங்கள் அண்டாத வாழ்வினையே தந்தருள வாருமைய்யா
பெருமையுடன் அடிபணிவோர் உயர்வடைய வழி தந்திடைய்யா
அளவெட்டி அமர்ந்தருளும் நாகவரதப் பெருமாளே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.