வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், கோண்டாவில் அருள்மிகு புவனேஸ்வரி அம்பாள் சமேத அதிபதீஸ்வரன் திருக்கோயில்
உலகாளும் பேரருளே ஈஸ்வரனே
உண்மை யெங்கும் நிலைபெறவே அருளிடைய்யா
நேர்மையுடன் நாம்வாழ வழி தருவாய்
அன்னை புவனேஸ்வரியுடன் கோயில் கொண்ட அதிபதீஸ்வரா துணையிருப்பாய்
கோண்டாவில் கோயில் கொண்டு அருள் பொழியும் பேரருளே
பொங்கி வரும் தீமைகளை அடியோடு ஒழித்திடைய்யா
அமைதியெங்கும் நிலவிடவே ஏற்றவழி காட்டிடுவாய்
அன்னை புவனேஸ்வரியுடன் கோயில் கொண்ட அதிபதீஸ்வரா துணையிருப்பாய்
நந்தி வாகனத்தை உடையவரே பேரருளே
நத்திவரும் எங்களுக்கு நலம் தந்து காத்திடைய்யா
கேடில்லா நல்வாழ்வை நாம்வாழ வழிதருவாய்
அன்னை புவனேஸ்வரியுடன் கோயில் கொண்ட அதிபதீஸ்வரா துணையிருப்பாய்
உடுக்கையைக் கையிலேந்தி ஒலி எழுப்பும் பேரருளே
உலகினிலே நிம்மதியை ஒளிரச்செய்து விட்டிடைய்யா
உரிமையுடன் நாம் உயர உரியவழி தருவாய்
அன்னை புவனேஸ்வரியுடன் கோயில் கொண்ட அதிபதீஸ்வரா துணையிருப்பாய்
கங்கையம்மை முடிகொண்டு காவல் செய்யும் பேரருளே
காலமெல்லாம் எங்களுக்கு காவலாய் இருந்திடைய்யா
கிலேசமில்லா நல்வாழ்வை நாம்வாழ வழி தருவாய்
அன்னை புவனேஸ்வரியுடன் கோயில் கொண்ட அதிபதீஸ்வரா துணையிருப்பாய்
அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் அதிசயனே பேரருளே
அச்சமின்றி நாம் வாழ எங்களுக்கு உதவிடைய்யா
அன்புமிகு நல்வாழ்வை நாம் வாழத்துணை தருவாய்
அன்னை புவனேஸ்வரியுடன் கோயில் கொண்ட அதிபதீஸ்வரா துணையிருப்பாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.