வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – கொக்குவில் மேற்கு அருள்மிகு பிடாரி அம்மன் திருக்கோயில்
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் தாயே
கவலைகள் மறைந்துவிட அருள் தருவாய் அம்மா
நெருங்க வரும் தீமைகளைத் துடைத்தெறிய வழி செய்
கொக்குவில் கோயில் கொண்ட பிடாரி அம்மா அருள்வாய்
தீமைகளைத் துடைத் தெறிய விரைந்து வரும் தாயே
திறமைகள் வெளிப்படவே அருள் தருவாய் அம்மா
அச்சமில்லா நிம்மதியை நாமடைய வழி செய்
கொக்குவில் கோயில் கொண்ட பிடாரி அம்மா அருள்வாய்
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வந்தமர்ந்த தாயே
வாழ்வு நல் வளம் பெறவே அருள் தருவாய் அம்மா
வளம் மிக்க பெருவாழ்வை நாமடைய வழி செய்
கொக்குவில் கோயில் கொண்ட பிடாரி அம்மா அருள்வாய்
நிலையான பெருஞ் செல்வம் தந்தருளும் தாயே
நிம்மதியாய் வாழ்வதற்கு அருள்தருவாய் அம்மா
நொந்து மனம் வாடாமல் வாழ வழி செய்
கொக்குவில் கோயில் கொண்ட பிடாரி அம்மா அருள்வாய்
தமிழரசன் ஆட்சி செய்த புகழ் நிலம் அமர்ந்தருளும் தாயே
தளராத மனம் பெறவே அருள் தருவாய் அம்மா
துணிவு கொண்ட பெருவாழ்வை நாமடைய வழி செய்
கொக்குவில் கோயில் கொண்ட பிடாரி அம்மா அருள்வாய்
வனப்புமிகு திருக்கோயில் அமர்ந்தவளே தாயே
வெற்றிகளை நாமடைய அருள்தருவாய் அம்மா
வேதனை நெருங்காத நல்வாழ்வை நாமடைய வழி செய்
கொக்குவில் கோயில் கொண்ட பிடாரி அம்மா அருள்வாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.