வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டை சங்கரத்தை அருள்மிகு வீரபத்திர சுவாமி சமேத பத்திரகாளி அம்மன் திருக்கோயில்
மருத நிலச் சூழலிலே கோயில் கொண்ட தாயே
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைத்து அருளிடம்மா
நெருடலில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டும்
சங்கரத்தை இருந்தருளும் பத்திரகாளி அம்மா துணையிருப்பாய்
வளம் நிறைந்த வயல் நிலத்தில் மத்தியிலே குடியிருக்கும் தாயே
வளம் நிறைந்த வாழ்வு தந்து வாழவைத்து அருளிடம்மா
வெற்றிமிகு நல்வாழ்வை எமக்கருள வேண்டும்
சங்கரத்தை இருந்தருளும் பத்திரகாளி அம்மா துணையிருப்பாய்
வீரபத்திரரை அருகு கொண்டு அருளுகின்ற தாயே
வீரமிகு வாழ்வு தந்து வாழ வைத்திடம்மா
தோல்வியில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டும்
சங்கரத்தை இருந்தருளும் பத்திரகாளி அம்மா துணையிருப்பாய்
அதிசயங்கள் பல ஆற்றி அருள் பொழியும் தாயே
ஆற்றல் மிகு வாழ்வு தந்து வாழச்செய்வாயம்மா
உண்மை குன்றா நல்வாழ்வை எமக்கருள வேண்டும்
சங்கரத்தை இருந்தருளும் பத்திரகாளி அம்மா துணையிருப்பாய்
வெற்றி முகம் காட்டுகின்ற வீரமிகு தாயே
வீழ்ச்சியில்லா வாழ்வு தந்து வாழச் செய்வாயம்மா
தெளிவான மனநிலைய எமக்கருள வேண்டும்
சங்கரத்தை இருந்தருளும் பத்திரகாளி அம்மா துணையிருப்பாய்
வெற்றித் திருமகளாய் விளங்குகின்ற தாயே
வெறுப்பில்லா வாழ்வு தந்து வாழவைப்பாயம்மா
தொல்லையில்லா பெருவாழ்வை எமக்கருள வேண்டும்
சங்கரத்தை இருந்தருளும் பத்திரகாளி அம்மா துணையிருப்பாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.