கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – பாண்டிருப்பு அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில்
துன்பங்கள் போக்கி துயரங்கள் நீக்கும் தாயே
துணைதருவாய் என்றுன்னை நம்புகின்றோம் அம்மா
நம்பிக்கை தளராமல் காத்து அருள வேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட தாயே திரௌபதி அம்மா
தீயவர்கள் கொட்டத்தை அடக்க வரும் தாயே
தீயபகை கொடுமைகளைத் துடைத்தெறிவாய் அம்மா
நிலையான நிம்மதி தந்தருள வேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட தாயே திரௌபதி அம்மா
வளமான வாழ்வு தந்து வாழ வைக்கும் தாயே
வருந்துன்பம் துடைத்தெறிந்து காத்தருள்வாய் அம்மா
நேர்மையுடன் நிம்மதியாய் வாழ அருள் வேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட தாயே திரௌபதி அம்மா
தீராப்பகை அழிக்க அருள்புரியும் தாயே
தூய நல்ல மனதுடனே
வாழவைப்பாய் அம்மா
மேன்மையுடன் இப்புவியில் வாழ வழி தருவாய்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட தாயே திரௌபதி அம்மா
கிழக்கிலங்கை வீற்றிருந்து அருளுகின்ற தாயே
கிட்டவரும் வேதனைகள் தடுத்தருள்வாய் அம்மா
திறமையுடன் முன்னேற வழியருள வேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட தாயே திரௌபதி அம்மா
எழுச்சியுடன் வாழவழி காட்டுகின்ற தாயே
என்றும் இன்பமுடன் வாழ வழி தருவாய் அம்மா
ஒன்றுபட்டு நாம் வாழ வழியருள வேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட தாயே திரௌபதி அம்மா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.