News

நாவலப்பிட்டியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன்

 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பம் 25.08.2022 அன்று காலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

 

மிக நீண்ட காலமாக இத் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் 25.08.2022 அன்று காலை இந்த சிறுத்தை தேயிலை மலைகளில் போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

 

தற்போது தேயிலை மலைகளுக்குள் இந்த சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களில் சிறுத்தைகளின் அட்டகாசத்தினால் தேயிலை மலைகளில் தொழிலில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

 

குறித்த சிறுத்தையின் உடல் நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

சிறுத்தை உயிரிழந்தமை தொடர்பில் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் உடற் கூறுகள் பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top